ADDED : அக் 22, 2024 07:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்ககிரி: சங்ககிரி அருகே, மினிஆட்டோ மோதி பெண் பலியானார்.இடைப்பாடி அருகே மலங்காடு, குட்டிகரடு பகுதியை சேர்ந்த சேகர் மனைவி
மாரியம்மாள், 60. இவர் சொந்த வேலையாக சங்க-கிரி சென்றுள்ளார். நேற்று மாலை, 6:30
மணிக்கு கோவையிலி-ருந்து சேலம் செல்லும் நெடுஞ்சாலையில், அய்யங்காட்டூர்
பகு-தியில் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது சேலம் நோக்கி வந்த,
மினிஆட்டோ மோதியதில் பலத்த காயமடைந்து அவர் சம்பவ இடத்திலேயே
இறந்தார். சங்ககிரி போலீசார் விசா-ரித்து வருகின்றனர்.