/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பெண்ணை தாக்கியவர் கைது; மற்றொருவருக்கு வலை
/
பெண்ணை தாக்கியவர் கைது; மற்றொருவருக்கு வலை
ADDED : நவ 06, 2024 07:18 AM
தாரமங்கலம்: தாரமங்கலம் அருகே ராமிரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் தரண்யா, 26. ஆயாமரம் பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். தீபாவளியில் தற்காலிக பட்டாசு வைக்க அனுமதி பெற்று கடை வைத்தார். அதே பகுதியை சேர்ந்தவர்கள் சக்தி, 24, வினோத், 22. இவர்களுக்கும், தரண்யாவுக்கும் முன்விரோதம் உள்ளது. இந்நிலையில் கடந்த அக்., 31ல், 'யாரை கேட்டு இங்கு கடை வைத்தீர்கள்' என, இரு வாலிபர்களும் கேட்டு, தரண்யாவிடம் தகராறு செய்தனர்.
தொடர்ந்து இரும்பு பைப்பால், பட்டாசு கடை, அங்கிருந்த மானிடரை அடித்து உடைத்தனர். தடுக்க முயன்ற தரண்யாவை இரும்பு பைப்பால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துச்சென்றனர். இதுகுறித்து தரண்யா புகார்படி, தாரமங்கலம் போலீசார் நேற்று, வினோத்தை கைது செய்தனர். தலைமறைவான சக்தியை தேடுகின்றனர்.