/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
2வது திருணம் நடைபெற இருந்த நிலையில் பெண் விபரீத முடிவு
/
2வது திருணம் நடைபெற இருந்த நிலையில் பெண் விபரீத முடிவு
2வது திருணம் நடைபெற இருந்த நிலையில் பெண் விபரீத முடிவு
2வது திருணம் நடைபெற இருந்த நிலையில் பெண் விபரீத முடிவு
ADDED : நவ 24, 2025 04:27 AM
ஓமலுார்:இரண்டாவது திருமணம் நடக்க இருந்த நிலையில், மணப்பெண் விபரீத முடிவு எடுத்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஓமலுார், பாகல்பட்டி, பூமிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் முருகன், 58. இவரது மகள் நவீனா, 29. சேலம், இரும்பாலையில் ஜூனியர் அலுவலராக வேலை செய்துவந்தார். இவருக்கு கடந்த, 2020ம் ஆண்டு, திருச்சியைச் சேர்ந்த அரவிந்தன் என்பவருடன் திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றார். வரும், 27ல் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த ராஜசிம்மன் என்பவருடன் 2வது திருமணம் நடைபெற இருந்த நிலையில், நவீனா நேற்று முன் தினம் வயிற்று வலி காரணமாக, பாட்டி வைத்திருந்த மூட்டு வலி மருந்தை எடுத்து குடித்துள்ளார். அவரை மீட்டு, சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று காலையில் உயிரிழந்தார். ஓமலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.