/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பசுக்களுக்கு வளைகாப்பு பெண்கள் கொண்டாட்டம்
/
பசுக்களுக்கு வளைகாப்பு பெண்கள் கொண்டாட்டம்
ADDED : ஜூன் 16, 2025 06:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி, எஸ்.பாலம் பகுதியில், 'காமதேனு கோசாலை' பெயரில், 30க்கும் மேற்பட்ட மாடுகள் பராமரிக்கப்படுகின்றன.
அதில், நாட்டு பசு மாடுகளின் பால், 6 மாதங்கள் வரையான குழந்தைகளுக்கு இலவசமாக வழங்கப்படு-கிறது. அங்கு, 5 பசுக்கள் கருவுற்ற நிலையில், நாமக்கல் மாவட்டம் ராசி-புரத்தை சேர்ந்த, வாசவி கிளப் எனும் பெண்கள் அமைப்பினர் நேற்று, பசுக்களுக்கு வளைகாப்பு விழா நடத்தினர். முன்னதாக பசுக்களை குளிப்பாட்டி மஞ்சள், குங்குமம், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால், 'நலுங்கு' வைத்து பொன்னாடை போர்த்தி வழி-பட்டனர். மேலும் மாடுகளுக்கு, 9 வித பசுந்தீவனங்களை உண-வாக வழங்கினர்.