ADDED : டிச 25, 2025 05:30 AM
தலைவாசல்: இரு இடங்களில் குழந்தைகளுடன் பெண்கள் மாயமான நிலையில் போலீசார் தேடுகின்றனர்.
தலைவாசல் அருகே, கிழக்குராஜாபாளையம் ஊராட்சி நத்தக்-காடு கிராமத்தை சேர்ந்த, கூலித்தொழிலாளி ரமேஷ், 40. இவ-ருக்கு, மனைவி சங்கீதா, 23, மகள்கள் கவுசல்யா, 6, நிதீஷா, 4, ஆகியோர் உள்ளனர். கடந்த, 23ல், ரமேஷ், வீரகனுாருக்கு சென்-றுவிட்டு, வீட்டிற்கு வந்தார்.அப்போது, வீட்டில் இருந்த மனைவி, இரு மகளையும் காண-வில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகு-றித்து கணவர் ரமேஷ் அளித்த புகாரில், நேற்று, வீரகனுார் போலீசார் வழக்கு பதிவு செய்து, மாயமான மனைவி, இரு குழந்-தைகளையும் தேடி வருகின்றனர்.
அதேபோல் தலைவாசல் அருகே, திட்டச்சேரி கிராமத்தை சேர்ந்த, கூலித் தொழிலாளி சதீஷ்குமார், 32. இவருக்கு, மனைவி கீர்த்தனா, 28, மகன்கள் கிரித்தீஸ், 8, ஆருத்ரன், 6, ஆகியோர் உள்ளனர். கடந்த, 20ல், வீட்டில் இருந்த, கீர்த்தனா, இரு மகன்-களும் காணவில்லை.
பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகு-றித்து, கணவர் சதீஷ்குமார் அளித்த புகாரில், வீரகனுார் போலீசார் வழக்கு பதிவு செய்து, மாயமான மனைவி, இரு குழந்தைக-ளையும் தேடிவருகின்றனர்.

