/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'மகளிர் குழு அடையாள அட்டையால் கடன் பெற முன்னுரிமை அளிக்கப்படும்'
/
'மகளிர் குழு அடையாள அட்டையால் கடன் பெற முன்னுரிமை அளிக்கப்படும்'
'மகளிர் குழு அடையாள அட்டையால் கடன் பெற முன்னுரிமை அளிக்கப்படும்'
'மகளிர் குழு அடையாள அட்டையால் கடன் பெற முன்னுரிமை அளிக்கப்படும்'
ADDED : டிச 18, 2025 04:50 AM

சேலம்: சேலம், கோட்டையில், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு, நேற்று நடந்தது. கலெக்டர் பிருந்தாதேவி தலைமை வகித்தார்.
சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், மகளிர் குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கி பேசியதாவது: அடையாள அட்டை வைத்துள்ள மகளிர் குழு உறுப்பினர்கள், உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்த, 25 கிலோ வரை, கட்டணமின்றி பஸ்களில் எடுத்துச்செல்லலாம். இ - சேவை மையத்தில், சேவைகளுக்கு, 10 சதவீத கட்டண சலுகை பெறலாம். அரசு பதிவு பெற்ற மருத்துவமனைகளில் இந்த அடையாள அட்டையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
திருவிழா காலங்களில் கோ - ஆப்டெக்ஸ் நிறுவனங்களில் வழங்கப்படும் மானியத்துடன், கூடுதலாக, 5 சதவீத மானியம் பெறலாம். கூட்டுறவு கடன் பெறவும் முன்னுரிமை அளிக்கப்படும். ஆவின் உற்பத்தி பொருட்களில் பொருட்களுக்கு ஏற்ற படி, 1.4 முதல் 4.5 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும். இந்த விழா மூலம், 3,000 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.