ADDED : மே 31, 2026 03:11 AM
அ நிறம் | அளவு
கெங்கவல்லி:கெங்கவல்லி,
வடக்கு தெருவை சேர்ந்தவர் நுாருல் அமீன், 32. இவர், இரு நாட்களுக்கு
முன், வீடு முன் பைக் நிறுத்தியிருந்தார். மறுநாள் காணவில்லை. அவர்
புகார்படி கெங்க
வல்லி போலீசார், அப்பகுதியில் உள்ள, 'சிசிடிவி'
கேமராவை ஆய்வு செய்ததில், கெங்கவல்லி, கடம்பூர் சாலையை சேர்ந்த கூலித்
தொழிலாளி சுரேஷ், 47, பைக் திருடியது பதிவாகி இருந்தது.
நேற்று
அவரை, கைது செய்து, போலீசார் விசாரித்ததில், அதே பகுதியில் மேலும் இரு
பைக் திருடியதும், அதுதொடர்பாக வழக்குகள் உள்ளதும் தெரிந்தது.
அந்த பைக்குகளை, போலீசார் மீட்டனர்.
