ADDED : செப் 23, 2026 06:39 AM
அ நிறம் | அளவு
ஜலகண்டாபுரம்:ஜலகண்டாபுரம்,
செலவடையை சேர்ந்தவர் கண்ணன், 51. தேங்காய் லோடு ஏற்றும்
தொழிலாளியான இவருக்கு இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். மனைவி இறந்த
நிலையில், கண்ணன் தனியே வசித்தார். மூத்த மகன் அருண்குமார்,
தந்தை
வசிக்கும் சொந்த வீட்டின் மீது, கடன் வாங்கியுள்ளார். அதை கட்டாததால்,
கண்ணன், அருண்குமார் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. அதேநேரம் இளைய
மகன் சதீஷ்குமார் வீட்டுக்கு, கண்ணன் வந்து செல்வார். நேற்று காலை அவர்
வரவில்லை. இதனால் உறவினருக்கு தகவல் தெரிவித்து, வீட்டில் பார்க்க
சதீஷ்குமார் அறிவுறுத்தினார். அதன்படி அவர் சென்று பார்த்தபோது,
கண்ணன் துாக்கிட்டு தற்கொலை செய்தது தெரிந்தது. பின் சதீஷ்குமார்
புகார்படி, ஜலகண்டாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
