தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மது போதையில் கிணற்றில் விழுந்த தொழிலாளி பலி

மது போதையில் கிணற்றில் விழுந்த தொழிலாளி பலி

மது போதையில் கிணற்றில் விழுந்த தொழிலாளி பலி


ADDED : மார் 17, 2026 04:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 17, 2026 04:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தலைவாசல்: மதுபோதையில் கிணற்றில் தவறி விழுந்த, மரம் அறுக்கும் தொழிலாளி உயிரிழந்தார்.

பெரம்பலுார் மாவட்டம், குன்னம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் அஜித்குமார், 26. மரம் அறுக்கும் தொழிலாளியான இவர், கடந்த மாதம் தலைவாசலில் தங்கியபடி வேலைக்கு சென்று வந்-துள்ளார். நேற்று, இவர் சார்வாய் எம்.ஜி.ஆர்., நகர் பகுதியில் உள்ள செந்தில் என்பவரது கிணற்றின் அருகில், நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார்.அப்போது, போதையில் தடுமாறிய அஜித்குமார், தவறி கிணற்றில் விழுந்துள்ளார். 30 அடி தண்ணீரில் உயிருக்கு போரா-டிய நிலையில், அப்பகுதியினர் மற்றும் ஆத்துார் தீயணைப்பு நிலைய வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால், அஜித்-குமார் இறந்த நிலையில் அவரது உடலை மீட்டு வந்தனர். இதுகு-றித்து, தலைவாசல் போலீசார், வழக்கு பதிவு செய்து,

விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us