ADDED : ஆக 22, 2026 05:39 AM
அ நிறம் | அளவு
ஓமலுார்; சேலம், சன்னியாசிகுண்டு, பச்சப்பட்டியை சேர்ந்தவர் தாமோதரன், 28. கட்டட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலை, ஓமலுார், பெருமாள்மேடு, ஈடன் கார்டனில் உள்ள ஒரு கட்டடத்தில், 'பால் சீலிங்' வேலை செய்துகொண்டிருந்தார்.
அப்போது தரையில் இருந்த மின் ஒயர் மீது இரும்பு ஏணி(குதிரைக்கால்) நசுக்கி, அதில் இருந்து மின்சாரம் பாய்ந்ததில், தாமோதரன் துாக்க வீசப்பட்டார். அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு, அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் இறந்துவிட்டது தெரிந்தது. தாமோதரனின் தந்தை நவனீதம் புகார்படி, கட்டட மேற்பார்வையாளர் உள்பட, 2 பேர் மீது வழக்குப்பதிந்து, ஓமலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
