ADDED : செப் 25, 2026 05:35 AM
அ நிறம் | அளவு
ஆத்துார்; ஆத்துார், ராமநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார். இவரது, 40 அடி விவசாய கிணற்றில், 15 அடிக்கு தண்ணீர் இருந்தது. நேற்று மாலை, 4:00 மணிக்கு அந்த வழியே சென்ற ஒருவர், கிணற்றில் தவறி விழுந்து தத்தளித்துக்-கொண்டிருந்தார்.
இதுகுறித்து, 4:25 மணிக்கு தகவல் கிடைக்க, ஆத்துார் தீயணைப்பு வீரர்கள், 5 நிமிடத்தில் அங்கு சென்று, ஒரு மணி நேரத்துக்கு பின், அந்த நபரை இறந்த நிலையில் மீட்டனர். விசாரணையில் செல்லியம்பாளையத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி சதீஷ்குமார், 38, என தெரிந்தது. ஆத்துார் ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.
