/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
டிராக்டர் மீது லாரி மோதி விபத்து தொழிலாளி பலி; நண்பர் படுகாயம்
/
டிராக்டர் மீது லாரி மோதி விபத்து தொழிலாளி பலி; நண்பர் படுகாயம்
டிராக்டர் மீது லாரி மோதி விபத்து தொழிலாளி பலி; நண்பர் படுகாயம்
டிராக்டர் மீது லாரி மோதி விபத்து தொழிலாளி பலி; நண்பர் படுகாயம்
ADDED : செப் 06, 2025 02:09 AM
சேலம் :பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன், 39. கட்டட தொழிலாளியான இவருக்கு திருமணமாகி, இரு மகன்கள் உள்ளனர்.
கார்த்திகேயன் நேற்று, அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் செந்தில், 42, என்பவருடன் டிராக்டரில் ஓமலுார் சென்று பணி மேற்கொண்டார். பின் வீட்டுக்கு புறப்பட்டனர். மாலை, 5:45 மணிக்கு, சேலம், உடையாப்பட்டி பெருமாள் கோவில் மேட்டில் சென்றுகொண்டிருந்தபோது, ஈரோட்டில் இருந்து திருவண்ணாமலைக்கு சென்றுகொண்டிருந்த லாரி, டிராக்டர் மீது மோதியது. இதில் கார்த்திகேயன், செந்தில் துாக்கி வீசப்பட்டனர். படுகாயம் அடைந்த இருவரையும், மக்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். வழியில் கார்த்திகேயன் உயிரிழந்தார்.
செந்தில், மேல் சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அம்மாபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.