தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ விபத்தில் தொழிலாளி பலி

விபத்தில் தொழிலாளி பலி

விபத்தில் தொழிலாளி பலி


ADDED : ஜூலை 31, 2026 01:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 31, 2026 01:57 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆத்துார்: கெங்கவல்லி, கோனேரிப்பட்டி, கிறிஸ்தவ தெருவை சேர்ந்த, கூலித்தொழிலாளி அசோக்குமார், 48. நேற்று முன்தினம் மாலை, 4:50 மணிக்கு உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு, 'காலிபர்' பைக்கில் தம்மம்பட்டி குப்பை கிடங்கு வழியே, ஹெல்மெட் அணியாமல் வந்து கொண்டிருந்தார்.

அப்போது கெங்கவல்லியில் இருந்து, தம்மம்பட்டி நோக்கிச்-சென்ற, 'அப்பாச்சி' பைக் மோதியது. அதில் தடுமாறி விழுந்த அசோக்குமார் படுகாயம் அடைந்தார். மக்கள் மீட்டு, ஆத்துார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின் மேல்சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், நேற்று உயிரிழந்தார். தம்மம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us