ADDED : ஆக 21, 2024 06:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம், திருவாக்கவுண்டனுார், புத்தர் தெருவை சேர்ந்தவர் குமார், 50. இவருக்கு அதே பகுதியில் பூர்வீக நிலம் உள்ளது. அப்பகுதியை சேர்ந்த குமாரின் உறவினர் கோபால், 40. இவ-ருக்கும், குமாருக்கும் இடையே நேற்று முன்தினம் நிலம் தொடர்-பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த கோபால், கட்டையால் குமார் தலையில் தாக்கியுள்ளார். அதில் காயம் அடைந்த குமாரை, மக்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவம-னையில் சேர்த்தனர்.
இதையடுத்து சூரமங்கலம் போலீசார், கோபாலை கைது செய்தனர். இந்நிலையில் குமார் நேற்று உயிரிழந்தார். இதனால் அடிதடி வழக்கை, கொலை வழக்காக பதிவு செய்து போலீசார் விசாரிக்-கின்றனர்.

