ADDED : அக் 12, 2026 02:07 AM
அ நிறம் | அளவு
ஆத்துார்: கெங்கவல்லி, தெடாவூர் புதுாரை சேர்ந்தவர் ராஜேந்திரன், 47. வெளிநாட்டில் வேலை செய்து வந்த இவர், 6 மாதங்களுக்கு முன் சொந்த ஊர் வந்தார்.
குடும்ப பிரச்னையில், மனைவி ராகிணியுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினமும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ராஜேந்திரன், கத்தியால் தன்னைத்தானே குத்திக்கொண்டு ரத்த வெள்ளத்தில் விழுந்தார். அவரது மனைவி, அருகில் இருந்தவர்கள் உதவியுடன், அவரை, கெங்கவல்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். கெங்கவல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.
