/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சிஷ்ட நதி தரைப்பாலத்தில் தொழிலாளி சடலம் மீட்பு
/
சிஷ்ட நதி தரைப்பாலத்தில் தொழிலாளி சடலம் மீட்பு
ADDED : அக் 03, 2025 02:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார், ஆத்துார் முல்லைவாடி வழியே செல்லும் வசிஷ்ட நதி தரைப்பாலத்தின் அடிப்பகுதியில், ஆண் சடலம் கிடப்பதாக, ஆத்துார் டவுன் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார், உடலை கைப்பற்றி விசாரித்தபோது, முல்லைவாடி, அவ்வையார் தெருவை சேர்ந்த, மாதேஸ்வரன், 45, என்பதும், அம்மம்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக பணிபுரிந்ததும் தெரிந்தது.
கடந்த, 30ல் வேலைக்கு சென்ற பின் வீடு திரும்பவில்லை. அவரது மனைவி சத்யா, நேற்று அளித்த புகார்படி, ஆத்துார் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.