தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ அழுகிய நிலையில் ஊழியர் சடலம் மீட்பு

அழுகிய நிலையில் ஊழியர் சடலம் மீட்பு

அழுகிய நிலையில் ஊழியர் சடலம் மீட்பு


ADDED : செப் 19, 2026 03:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 19, 2026 03:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: ஆட்டையாம்பட்டி, தியாகி செல்லப்பன் வீதியை சேர்ந்தவர் ரகுபதி, 43. திருமணம் செய்து கொள்-ளாமல் தனியே வசித்த இவர், காளிப்பட்டியில் உள்ள நிதி நிறுவனத்தில் பணம் வசூல் செய்யும் வேலை செய்து வந்தார்.

'அல்சர்' பிரச்னையால் உடல்நிலை பாதிக்கப்-பட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 4 நாட்களாக, அவர், வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. நேற்று மாலை, வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசு-வதாக அக்கம்பக்கத்தினர் புகார் தெரிவித்தனர். இதை அறிந்து, வெண்ணந்துார் அடுத்த மின்னக்-கல்லில் வசிக்கும் அவரது சகோதரர் ரவி, 56, வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, ரகுபதி உடல் அழுகிய நிலையில் இறந்து கிடப்பது தெரிந்தது.

அவரது புகார்படி, ஆட்டையாம்பட்டி போலீசார், இறந்தவரின் உடலை மீட்டு விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us