தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ செயில் நிர்வாகத்தை கண்டித்து தொழிலாளர்கள் போராட்டம்

செயில் நிர்வாகத்தை கண்டித்து தொழிலாளர்கள் போராட்டம்

செயில் நிர்வாகத்தை கண்டித்து தொழிலாளர்கள் போராட்டம்


ADDED : ஜன 23, 2026 04:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 23, 2026 04:50 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சேலம்: செயில் நிர்வாகத்தை கண்டித்து, தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.

மத்திய அரசின் செயில் ரிப்ரேக்டரி நிறுவனம், சேலம் மாமாங்கம் பகுதியில் இயங்கி வருகிறது.

இந்நிறுவனத்தில் மெக்-னீசியம் எனப்படும், வெள்ளைகல் வெட்டி எடுத்து சேலம் உருக்-காலைக்கு, இரும்பு தாதுவை உருக்கும் பணிக்கு அனுப்பி வைக்-கப்படுகிறது. 40 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில், ஏராள-மான தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.இவர்களுக்கு சம வேலை சம ஊதியம் வழங்குவதாக ஒப்புதல் வழங்கப்பட்டது. ஆனால் கடந்த, 20 ஆண்டுகளாக சம ஊதியம் வழங்காமல் உள்ளனர். இதனிடையே ஆலையில் பணிகளை, தனியார் ஒப்பந்ததாரர்களுக்கு செயில் நிர்வாகம் வழங்கி வரு-வதால், 400க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்-ளனர். இந்த நடவடிக்கையை கண்டித்து, நேற்று நுாற்றுக்கும் மேற்பட்டோர் உள்ளிருப்பு போரட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து, தொழிலாளர்கள் மறுவாழ்வு முன்னேற்ற சங்க தலைவர் சேட்டு கூறுகையில், ''கடந்த 2000ம் ஆண்டு முதல் எங்-களது கோரிக்கைகள் நிறைவேறாமல் உள்ளது. பல கட்ட போராட்டம் நடத்தி வருகிறோம். செயில் நிர்வாகம் எங்களுக்கு பணி நிரந்தரம், சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வாக்குறுதி அளித்து நடைமுறைப்படுத்தாமல் உள்ளனர். நீதிமன்ற உத்தரவின் படி பணப்பயன் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும், மத்திய அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும்,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us