ஆவணம் வழங்குவதில் தாமதம் கோர்ட்டில் தொழிலாளி தர்ணா
ஆவணம் வழங்குவதில் தாமதம் கோர்ட்டில் தொழிலாளி தர்ணா
ADDED : ஆக 05, 2026 04:24 AM
அ நிறம் | அளவு
சேலம்:சேலம், தாதம்பட்டி, காந்தி நகரை சேர்ந்தவர் தமிழ்செல்வன், 45. இவர் மீது, 2002ல் ஆட்டோ மோதியதில் தாடையில் காயம் ஏற்பட்டது. இதற்கான இழப்பீடு வழக்கில், சேலம் நீதிமன்றம், 2019ல் தீர்ப்பு வழங்கியது.
அதில் இன்சூரன்ஸ் நிறுவனம், 1.55 லட்சம் ரூபாய் இழப்பீடு தர உத்தரவிட்டிருந்தது. அதற்கான ஆவணங்களை நீதிமன்றத்தில் இருந்து பெறுவதில் தாமதம் ஏற்படுவதாக கூறி, தமிழ்செல்வன் நேற்று, சேலம் நீதிமன்ற வளாகத்தில் உள்ள நீதிதேவதை சிலை முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். போலீசார், அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
