தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ உலக புத்தக தின வார விழா நிறைவு

உலக புத்தக தின வார விழா நிறைவு

உலக புத்தக தின வார விழா நிறைவு


ADDED : மே 18, 2026 01:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 18, 2026 01:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: சேலம் மாவட்ட மைய நுாலகத்தில், வாசகர் வட்டம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், உலக புத்தக தினம் மற்றும் குழந்-தைகள் கோடை கொண்டாட்ட வார விழா கடந்த, 11ல் தொடங்கி நேற்று நிறைவு பெற்றது. இயக்க மாவட்ட தலைவர் தோமினிக் தலைமை வகித்தார். அதில், 6ம் வகுப்பு மாணவர் பிரணவ், 'கடைசி இலை' எனும் புத்தகத்தை அறிமுகப்படுத்தி பேசினார்.

மாவட்ட நுாலக அலுவலர் கோகிலவாணி, முதல்நிலை நுாலகர் சித்ராபூரணம் ஆகியோர் குழந்தைகளை வாழ்த்தினர். தொடர்ந்து இயக்க மாவட்ட செயலர் வெங்கடேசன், 'அறிவியலும், தொழில்-நுட்பமும்' தலைப்பில் குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.இதில் தினமும் புத்தகங்களை அறிமுகப்படுத்தி பேசிய குழந்தை-களுக்கு புத்தகம் சிறப்பு பரிசாக வழங்கி பாராட்டப்பட்டனர். ஒரு வார நிகழ்வில் பங்கேற்ற அனைத்து குழந்தைகளுக்கும் நுாலக உறுப்பினர் அட்டை, எங்கள் தேசம் புத்தகம் வழங்கப்பட்-டன. தொடர்ந்து பங்கேற்ற, 40 குழந்தைகளுக்கு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டார்கள். இயக்க துணைத்தலைவர் சுரேஷ், பெற்றோர்

பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us