ADDED : அக் 10, 2026 05:27 AM
அ நிறம் | அளவு
பனமரத்துப்பட்டி; சந்தியூர் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில், உலக முட்டை தின விழா, அம்மா
பாளையம் அரசு நடுநிலைப்
பள்ளியில் நேற்று கொண்டாடப்பட்டது.
அதில், ஊரக தோட்டக்கலை பணி அனுபவ பயிற்சிக்கு, சந்தியூர் வேளாண் அறிவியல் நிலையத்தில் தங்கியுள்ள, கிருஷ்ணகிரி தோட்டக்கலை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய, 4ம் ஆண்டு மாணவியர், பள்ளி மாணவ, மாணவியருக்கு முட்டையில் உள்ள ஊட்டச்சத்து, புரதச்சத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அறிவியல் நிலைய
பணியாளர்கள், ஆசிரியர்கள்
பங்கேற்றனர்.
