ADDED : மார் 13, 2026 04:06 AM

சேலம்: உலக குளுக்கோமா வாரத்தை ஒட்டி, சேலம் விநாயகா மிஷனின் விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரியின், கண் ஒளியியல் பிரிவு மூலம் விழிப்புணர்வு வாக்கத்தான் பேரணி, பல்கலை வேந்தர் கணேசன் வழிகாட்டுதல்படி, சேலத்தில் நடத்-தப்பட்டது. டீன் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.
சேலம் மாவட்ட சுகாதார அதிகாரி சவுண்டம்மாள், பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அதில் கல்லுாரியை சேர்ந்த மாணவ, மாணவியர், விழிப்புணர்வு கண் கண்ணாடியை அணிந்து, விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச்சென்று, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய கைவிசிறியை, மக்களுக்கு வழங்கினர். சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கிய பேரணி, பேலஸ் தியேட்டர் பகுதியில் முடிந்தது. இதற்கான ஏற்பாட்டை, கல்லுா-ரியின் கண் ஒளியியல் பிரிவு பொறுப்பாளர் தமிழ்சுடர், உதவி பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
