sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

காளிப்பட்டி கந்தசாமி உள்ளிட்ட முருகன் கோவில்களில் பூஜை

/

காளிப்பட்டி கந்தசாமி உள்ளிட்ட முருகன் கோவில்களில் பூஜை

காளிப்பட்டி கந்தசாமி உள்ளிட்ட முருகன் கோவில்களில் பூஜை

காளிப்பட்டி கந்தசாமி உள்ளிட்ட முருகன் கோவில்களில் பூஜை


ADDED : பிப் 04, 2025 06:37 AM

Google News

ADDED : பிப் 04, 2025 06:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வீரபாண்டி: தை மாத வளர்பிறை சஷ்டியான நேற்று, சேலம்-நாமக்கல் எல்-லையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் நேற்று காலை, 6:00 மணிக்கு கோ பூஜையுடன் கந்த-சாமி விஸ்வரூப தரிசனம் அளித்தார்

.

மூலவர் கந்தசாமிக்கு, 16 வகையான மங்கல பொருட்களால் சிறப்பு அபிேஷகம் செய்து, முத்தங்கி அணிவித்து ராஜ அலங்கா-ரத்துடன் தீபாராதனை காட்டப்பட்டது. உற்சவர் கந்தசாமி தன் அண்ணன் விநாயகர் மற்றும்

வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி கவசத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.சஷ்டியில்

கந்தசாமியை தரிசிக்க சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட சுற்று-வட்டாரங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான

பக்தர்கள் குடும்பத்-துடன் கோவிலுக்கு வந்து நீண்ட வரிசை யில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து, சஷ்டி

விரதத்தை துவக்கினர்.

இதே போல் வளர்பிறை சஷ்டியையொட்டி, சேலம் ஆட்டை-யாம்பட்டி வேலநத்தம் பாவடியில் உள்ள

முத்துக்குமாரசுவாமி கோவில், வள்ளி தெய்வானை சமேத பாலசுப்பிரமண்யர் கோவில்களில் நடந்த பூஜைகளில்

திரளான பக்தர்கள் முருகப்பெ-ருமானை தரிசித்தனர்.* சங்ககிரி, சவுந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோவிலில் உள்ள வள்ளி, தெய்வானையுடன் முருகன்,

கோவிலை சுற்றி வலம் வந்தார். கட்டளைதாரர்கள், முருக பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.* தாரமங்கலம், கைலாசநாதர் கோவிலில் நேற்று காலை நந்தி மண்டபம் முன், தேரில் எழுந்தருளிய

சோமாஸ்கந்தர், உமாமகேஸ்வரி, வரதராஜ பெருமாள் உள்ளிட்ட சுவாமிகளுக்கு பூஜை செய்தனர். தைப்பூச தேர்த்திருவிழாவையொட்டி, நேற்று கொடியேற்றம் நடந்தது. இரவு: 7:00 மணிக்கு மேல் சோமாஸ்கந்தர்,

உமாமகேஸ்-வரி சுவாமி சிறப்பு அலங்காரத்தில், சேஷ வாகனத்தில் கோவிலில் எழுந்தருள செய்தனர்.

அங்கிருந்து முக்கிய வீதிகள்வழியாக திருவீதி உலா நடந்தது.






      Dinamalar
      Follow us