/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
புது திருக்கோடி துாணில் தீபம் ஏற்றி வழிபாடு
/
புது திருக்கோடி துாணில் தீபம் ஏற்றி வழிபாடு
ADDED : செப் 27, 2025 01:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆட்டையாம்பட்டி, ஆட்டையாம்பட்டி,
சந்தைப்பேட்டை அருகே கோண பெருமாள் கோவில் வீட்டில், புதிதாக திருக்கோடி துாண் அமைக்கப்பட்டது. நேற்று சுவாமிக்கு அபிஷேகம் செய்து, துாணுக்கு கணபதி உள்ளிட்ட ஹோமங்கள் நடந்து அபிஷேகம் நடந்தது.
திருக்கோடி தீபத்தை, மேள தாளம் முழங்க, கோவிலை சுற்றி வந்து புதிதாக அமைக்கப்பட்ட துாணில் ஏற்றப்பட்டது. அப்போது பக்தர்கள், 'கோவிந்தா' கோஷம் எழுப்பி, மலர் துாவி பெருமாளை வழிபட்டனர்.