/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பனிமூட்டத்துடன் மழை வெறிச்சோடிய ஏற்காடு
/
பனிமூட்டத்துடன் மழை வெறிச்சோடிய ஏற்காடு
ADDED : நவ 18, 2024 03:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஏற்காடு: ஏற்காட்டுக்கு வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்களில் ஏராள-மான சுற்றுலா பயணியர் வருவர். ஆனால் நேற்று ஏற்காட்டில் நிலவிய பனிமூட்டம், மழையால் சுற்றுலா பயணியர் எண்-ணிக்கை வெகுவாக குறைந்திருந்தது.
குறிப்பாக அண்ணா, ஏரி பூங்காக்கள், படகு இல்லம், ரோஜா தோட்டம், லேடீஸ், ஜென்ஸ் சீட்டுகள், பக்கோடா பாயின்ட், சேர்வராயன் கோவில் ஆகிய இடங்களில் சுற்றுலா பயணியர் குறைந்த அளவிலேயே காணப்பட்டனர். அவர்கள், பனிமூட்டத்தை கண்டு ரசித்து புகைப்படம், 'செல்பி' எடுத்து மகிழ்ந்தனர். மேலும் விடுமுறை நாளில் எப்போதும் நெரிசலுடன் காணப்படும் முக்கிய சாலைகள் வெறிச்சோடின.