/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஏற்காடு மலை கிராம மாணவி உலக சிலம்ப போட்டிக்கு தகுதி
/
ஏற்காடு மலை கிராம மாணவி உலக சிலம்ப போட்டிக்கு தகுதி
ஏற்காடு மலை கிராம மாணவி உலக சிலம்ப போட்டிக்கு தகுதி
ஏற்காடு மலை கிராம மாணவி உலக சிலம்ப போட்டிக்கு தகுதி
ADDED : ஆக 16, 2024 05:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஏற்காடு: சேலம் மாவட்டம் ஏற்காடு, குண்டூர் மலைக்கிராமத்தை சேர்ந்த தொழிலாளி சுந்தரம்.
இவரின் மகள் அனுஷ்கா, 14; ஏற்காட்டில் தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார். 'யுனிட்டி ஆப் யூத்' நிறுவனம் மூலம், சிலம்ப பயிற்சி பெற்றார். கோவையில் சமீபத்தில் நடந்த மாநில போட்டி யில் மூன்றாமிடம் பிடித்தார். இதன்மூலம் மலேசியாவில் அக்டோபர் மாதம் நடக்கவுள்ள உலக போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றார். இதனால் மாணவி அனுஷ்கா, தனது பெற்றோருடன் சென்று, சேலம் கலெக்டரை சந்தித்து வாழ்த்து பெற்றார். குண்டூர் மலை கிராம மக்களும் மாணவிக்கு பாராட்டு தெரிவித்தனர்.