ADDED : ஏப் 27, 2026 01:53 AM
ஏற்காடு: ஏற்காட்டுக்கு விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பய-ணியர் வந்து செல்கின்றனர். தற்போது கடந்த, 23ல் சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு நடந்தது. அதை தொடர்ந்து மறுநாள் ஏற்-காட்டுக்கு சுற்றுலா பயணியர் படையெடுத்தனர்.
தொடர்ந்து சனிக்கிழமையன்றும் கூட்டம் குவிந்தது. இந்நி-லையில் ஞாயிறான நேற்று, சுற்றுலா பயணியர் அதிகளவில் குவிந்தனர். அவர்கள், அண்ணா, ஏரி, தாவரவியல் பூங்காக்கள், படகு இல்லம், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், ரோஜா தோட்டம், பக்கோடா பாயின்ட், சேர்வராயன் கோவில் உள்ளிட்ட இடங்-களை கண்டுகளித்தனர்.மேலும் படகு இல்லத்தில் ஏராளமான சுற்றுலா பயணியர், பய-ணச்சீட்டு வாங்கி வெகு நேரம் காத்திருந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். முன்னதாக அங்கு காத்திருந்தபோது, அங்குள்ள குழந்தைகள் விளையாடும் இடத்தில், பல குழந்தைகள் விளை-யாடி மகிழ்ந்தனர்.
அதேபோல் மேட்டூர் அணை பூங்காவை, 6,698 சுற்றுலா பய-ணியர் கண்டுகளித்தனர். பூங்காவின் ஒரு பகுதியிலுள்ள திடலில் குழந்தைகள் விளையாடி மகிழ்ந்தனர்.
இதனால் நீர்வளத்துறைக்கு, 96,610 ரூபாய் நுழைவு கட்டணம் வசூலானது. அதேநேரம் வெயில் தாக்கம் அதிகளவில் இருந்-ததால் பெரும்பாலான சுற்றுலா பயணியர், மேட்டூர் அணை பூங்கா எதிரே ஓடும் கிழக்கு, மேற்கு கால்வாயில் குளித்து கோடை வெப்பத்தை தணித்துக்கொண்டனர்.
பூலாம்பட்டியில் ரசிப்பு
சேலம் மாவட்டம் பூலாம்பட்டியில் இருந்து ஆற்றின் மறு கரையில் உள்ள ஈரோடு மாவட்டம் நெருஞ்சிப்பேட்டைக்கு, விசைப்படகு போக்குவரத்து உள்ளது. பலர் விசைப்படகில் சென்று காவிரி ஆற்றை ரசிக்கின்றனர். கோடை விடுமுறை மற்றும் ஞாயிறான நேற்று, வழக்கத்தை விட ஏராளமான சுற்றுலா பயணியர், விசைப்
படகில் சென்று ரசித்தனர். இதனால் பூலாம்பட்டி காவிரி கரை-யோரம் கூட்டமாக காணப்பட்டது.
