/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஏற்காட்டில் 'குளுகுளு' சூழல் சுற்றுலா பயணியர் குதுாகலம்
/
ஏற்காட்டில் 'குளுகுளு' சூழல் சுற்றுலா பயணியர் குதுாகலம்
ஏற்காட்டில் 'குளுகுளு' சூழல் சுற்றுலா பயணியர் குதுாகலம்
ஏற்காட்டில் 'குளுகுளு' சூழல் சுற்றுலா பயணியர் குதுாகலம்
ADDED : மே 17, 2024 02:20 AM
ஏற்காடு: கோடை விடுமுறையால் ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணியர் அதிகளவில் வருகின்றனர். நேற்றும் ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள், அண்ணா, ஏரி, தாவரவியல் பூங்காக்கள், ரோஜா தோட்டத்தை சுற்றிப்பார்த்தனர். குறிப்பாக அண்ணா பூங்காவில் மலர் கண்காட்சிக்கு தயார் செய்யப்பட்டிருந்த செடிகளில் பூத்து குலுங்கிய பூக்களை கண்டு ரசித்து அதன் அருகே நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். மேலும் படகு இல்லத்தில் வெகுநேரம் காத்திருந்து சுற்றுலா பயணியர் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
ஏற்காட்டிலும் வெயில் தாக்கம் அதிகம் இருந்த நிலையில், சில நாட்களாக அடிக்கடி மழை பெய்து வருவதால், அங்கு வெயில் தாக்கம் குறைந்து ஏற்காடு முழுதும், 'குளுகுளு'வென மாறியுள்ளது. இந்த சூழலை ரசித்தபடி, சுற்றுலா பயணியர் ஏற்காட்டை சுற்றி சுற்றி குதுாகலம் அடைந்தனர்.
திடல் சீரமைப்பு
ஏற்காட்டில் கோடை விழா, மலர் கண்காட்சி நடத்துவதற்கான ஏற்பாட்டை, மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக அண்ணா பூங்காவில் மலர் கண்காட்சி நடக்க உள்ள திடலை சீரமைக்கும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக பழைய மேற்கூரையை அகற்றிவிட்டு புது சிமென்ட் சீட் போடும் பணியில் பூங்கா நிர்வாகத்தினர் ஈடுபட்டனர். தொடர்ந்து சிவப்பு கம்பளம் விரித்து மலர் தொட்டிகளை அடுக்குவதற்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டனர்.

