தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ இணைய வழி திறன் மேம்பாடு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

இணைய வழி திறன் மேம்பாடு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

இணைய வழி திறன் மேம்பாடு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்


ADDED : ஜன 22, 2026 04:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 22, 2026 04:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: இணைய வழி திறன் மேம்பாடு பயிற்சி பெற கட்டுமான தொழி-லாளர் நல வாரிய உறுப்பினர்களின் குழந்தைகள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் தொழிலாளர் உதவி கமிஷனர் சங்கீதா(சமூக பாதுகாப்பு திட்டம்) அறிக்கை:

தமிழக கட்டுமான கழகம் சார்பில், 40 பிரிவுகளில் இணைய வழி திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படவுள்ளது. அதில் கட்டு-மான தொழிலாளர் நல வாரியம் மூலம், 2025 - 26ம் ஆண்டு கல்வி உதவித்தொகை பெற்று பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, பாலிடெக்னிக், ஐ.டி.ஐ., படிக்கும் மாணவர்கள் அல்லது கல்வி உதவித்தொகை வேண்டி விண்ணப்பித்தவர்கள், ஒரு குடும்-பத்தில், 2 பேர் பங்கேற்கலாம். விருப்பம் உள்ளவர்கள், கோரி-மேட்டில் உள்ள தொழிலாளர் உதவி கமிஷனர் அலுவலகத்தில் நல வாரிய உறுப்பினருடன், அசல் ஆவணங்களுடன் வந்து விண்-ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து இணைய வழி திறன் மேம்-பாடு பயிற்சி பெறலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us