/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
யோகா பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
/
யோகா பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
ADDED : நவ 06, 2025 01:22 AM
சேலம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாடு ஆணையம் சார்பில், சேலம் காந்தி விளையாட்டரங்கில், யோகா பயிற்சியாளர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது.
அதற்கு தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலையால் வழங்கப்பட்ட யோகா மற்றும் இயற்கை அறிவியல் இளங்கலை பட்டம் அல்லது யோகா மற்றும் இயற்கை அறிவியல் பட்டயப்படிப்பு சான்றிதழ் பெற்ற, தகுதியுடையவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது தற்காலிக பணி. அதனால் வேலை வாய்ப்பு சலுகை, நிரந்தர பணி கோர முடியாது.
யோகா பயிற்றுனராக பயிற்சி அளிக்க விரும்புவோர், சுய விபரங்களை, சேலம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், மகாத்மா காந்தி விளையாட்டரங்கம் அலுவலகத்தில் வரும், 10 மாலை, 5:00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். கல்வித்தகுதி அடிப்படையில் தேர்வு நடக்கும். தேர்வு நாள் உள்ளிட்ட இதர விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என, கலெக்டர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.

