ADDED : மே 13, 2026 04:06 AM
அ நிறம் | அளவு
சேலம்: சேலம், ஜான்சன்பேட்டை - 2, கன்னங்குறிச்சியில் காந்தி நகர், சின்னதிருப்பதி ரேஷன்கடைகளில், அத்தியாவசிய பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா என கலெக்டர் அருண்தம்புராஜ் நேற்று ஆய்வு செய்தார். அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களின் தரம் குறித்து நுகர்வோரிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து கலெக்டர் கூறுகையில், ''அத்தியாவசிய பொருட்கள் வினியோகத்தில் குறைகள் இருப்பின் ரேஷன் கடை தகவல் பல-கையில் இடம்பெற்றுள்ள உயர் அதிகாரிகளின் மொபைல் எண்களுக்கு தொடர்பு கொண்டு தீர்வு காண வழி
செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.
