ADDED : ஜூன் 28, 2026 03:07 AM
முதல்வர் விஜய் பிறந்தநாளை ஒட்டி, கடந்த, 22ல் பிறந்த, 21 பெண் குழந்தைகளுக்கு, த.வெ.க., சார்பில் தபால் அலுவலகம் மூலம், செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில், தலா, 5,000 ரூபாய் செலுத்-திய பாஸ் புத்தகங்களை, தாய்மார்களிடம் ஒப்ப-டைக்கும் நிகழ்ச்சி சேலம் அரசு
மருத்துவமனையில் நேற்று நடக்கவிருந்தது.
இதற்கு, 21 குழந்தைகளின் தாய்களையும், மருத்துவமனை பிரசவ வார்டு முதல் தளத்தில் உள்ள அறையில், மருத்துவமனை நிர்வாகத்-தினர் காத்திருக்க வைத்தனர். மதியம், 12:00 மணிக்கு, போக்குவரத்து அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் வருவார் என, நிருபர்க-ளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்ததால், 20க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் மற்றும் த.வெ.க., நிர்வாகிகள், போலீசார், மருத்துவமனை டீன் உள்ளிட்ட மருத்துவர்கள் காத்திருந்தனர். மதியம், 2:30 மணி வரை அமைச்சர் வரவில்லை. பின் கட்சி நிர்வா-கிகளுக்கு மொபைல் போன் மூலம், நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டடதாக அமைச்சர் தரப்பில் தெரிவிக்-கப்பட்டது. இதனால் பச்சிளங்குழந்தைகளை விட்டு பிரிந்து வந்த, இளம் தாய்மார்கள், ஒரே அறையில், 2 மணி நேரம் காத்திருந்து தவிப்புக்கு ஆளாகி, ஏமாற்றத்தையும் சந்தித்தனர்.
