/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கத்தி முனையில் பணம் பறித்த வாலிபர் கைது
/
கத்தி முனையில் பணம் பறித்த வாலிபர் கைது
ADDED : செப் 17, 2025 01:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம் கோட்டை பகுதியை சேர்ந்தவர் அருண்குமார், 36. இவர், நேற்று முன்தினம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி, அவரிடம் இருந்த, 3,000 ரூபாயை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பினார். அதிர்ச்சியடைந்த அருண்குமார்,
இது குறித்து சேலம் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் விசாரணை நடத்தி, அருண்குமாரிடம் இருந்து பணம் பறிப்பில் ஈடுபட்டது கிச்சிபாளையம் சுண்ணாம்பு சூளை பகுதியை சேர்ந்த ஆனந்த், 34, என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து கத்தி, 1,000 ரூபாயை பறிமுதல் செய்தனர்.