/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மொபட்டில் மதுபாட்டில் கடத்திய வாலிபர் கைது
/
மொபட்டில் மதுபாட்டில் கடத்திய வாலிபர் கைது
ADDED : ஜூன் 17, 2025 01:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில், சேலம் டவுன் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன், எஸ்.ஐ., நவநீதகுமார் ஆகியோர் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது, சுசூகி அசஸ் மொபட்டில் சந்தேகப்படும்படி இருவர் சென்றனர். அவர்களை பிடித்து விசாரித்தபோது, ஒருவர்
தப்பினார்.
மற்றொருவரிடம் விசாரித்தபோது, அவர் கோலாத்து கோம்பையை சேர்ந்த ஹரிகிருஷ்ணன், 25, என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து, 98 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய சன்னியாசிகுண்டு பகுதியை சேர்ந்த குமார் என்பவரை தேடி வருகின்றனர்.