ADDED : செப் 05, 2026 04:42 AM
அ நிறம் | அளவு
சேலம்; சேலம், கருப்பூர் அடுத்த வெள்ளாளப்பட்டியை சேர்ந்தவர் பிரகாஷ், 42. இவருக்கு சொந்தமான விவசாய நிலம், அங்குள்ள மின்வாரிய அலுவ-லகம் அருகே உள்ளது. இரு நாட்களுக்கு முன், விவசாய நில கிணற்றில் இருந்த மின்மோட்-டாரின், 40 மீ., ஒயரை மர்ம கும்பல் திருடிச்சென்-றது.
இப்புகாரின்படி கருப்பூர் போலீசார் விசா-ரித்து, வெள்ளாளப்பட்டி, பழைய காலனி, ஆதிதி-ராவிடர் தெருவை சேர்ந்த வசந்த், 30, என்பவரை நேற்று கைது செய்தனர். அவரது வாக்குமூலப்-படி, அதே பகுதியை சேர்ந்த கூட்டாளிகள் கவுதம், சந்துருவை தேடுகின்றனர்.
