/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நுாதன முறையில் மூதாட்டியிடம் நகை பறித்த வாலிபருக்கு வலை
/
நுாதன முறையில் மூதாட்டியிடம் நகை பறித்த வாலிபருக்கு வலை
நுாதன முறையில் மூதாட்டியிடம் நகை பறித்த வாலிபருக்கு வலை
நுாதன முறையில் மூதாட்டியிடம் நகை பறித்த வாலிபருக்கு வலை
ADDED : மே 27, 2025 02:03 AM
அ.பட்டணம், அயோத்தியாப்பட்டணம் அடுத்த கருமாபுரத்தை சேர்ந்தவர் செல்வராஜ் மனைவி சீரங்கம்மாள், 62. இவர் நேற்று காலை, 8:30 மணிக்கு வீட்டின் முன் அமர்ந்து தென்னங்கீற்று பின்னிக் கொண்டிருந்தார். அப்போது, பைக்கில் வந்த மர்ம நபர் ஒருவர், 600 தென்னங்கீற்று விலைக்கு வேண்டும் என தெரிவித்துள்ளார். சீரங்கம்மாள் இரு நாட்களில் பின்னி கொடுப்பதாக கூறினார். தொடர்ந்து அந்த மர்ம நபர், காரிப்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில், தங்க நகை மதிப்பீட்டு கடன் வழங்கும் வேலை செய்வதாக தெரிவித்துள்ளார்.
சிலர் அந்த வங்கியில் நகை வைத்து விட்டு வாங்காமல் போனதால், ஒரு பவுன் தங்க நகை, 25 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் வருவதாகவும், அந்த நகையை தங்களுக்கு தருவதாக தெரிவித்து பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர், பணம் இல்லையென்றும், தன்னிடம் ஒன்றே கால் பவுன் செயின் மட்டும் அறுந்த நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார். பின், சீரங்கம்மாள் ஆதார் கார்டை மொபைல்போனில் பணம் எடுத்துக்கொண்டு, அறுந்த தங்கச் செயினை அருகில் சென்று சரி செய்து தருவதாக தெரிவித்து விட்டு வாங்கி சென்றவர், நீண்ட நேரமாகியும் வராததால், சீரங்கம்மாள் போலீசில் புகார் கொடுத்தார்.
இதுகுறித்து காரிப்பட்டி போலீசார் விசரித்து வருகின்றனர்.