ADDED : செப் 14, 2026 06:12 AM
அ நிறம் | அளவு
சேலம்:சேலம்,
சீலநாக்கன்பட்டி மாரியம்மன் கோவில் வடக்கு தெருவை சேர்ந்த,
தொழிலாளி பாலகிருஷ்ணன், 45. இவர் கடந்த, 11ல் வீட்டில் இருந்தபோது
அதே பகுதியை சேர்ந்த ராதா என்பவர், வீடு முன் குப்பை கொட்டியுள்ளார்.
இதுகுறித்து பாலகிருஷ்ணன் கேட்டுள்ளார். இதில் வாக்குவாதம்
ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ராதாவின் மகன் மணிமாறன், 33, கட்டையால்
பாலகிருஷ்ணனை தாக்கியுள்ளார். காயம் அடைந்த அவர், அன்னதானப்பட்டி
போலீசில் புகார் கொடுத்தார். விசாரித்த போலீசார், நேற்று முன்தினம்
மணிமாறனை கைது செய்தனர்.
