ADDED : செப் 15, 2026 06:59 AM
சேலம்,:சேலம்
டவுன் ரயில்வே ஸ்டேஷன் அருகே, சுப்பராயன் தெருவை சேர்ந்த சேகர் மகன்
மதன்ராஜ், 24. இவர், 9ம் வகுப்புபடித்துவிட்டு பெயின்டராக வேலை
செய்கிறார். கடந்த 13ம் தேதி இரவு, 9:30 மணியளவில், அதே பகுதியில் உள்ள
எலைட் ஒயின்ஷாப் அருகே, தனியாக நடந்து சென்றுள்ளார்.
அப்போது,
வாலிபர் ஒருவர் வழிமறித்து, குடிக்க பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.
அதற்கு அவர், தன்னிடம் பணம் இல்லையென கூறவே, அந்த வாலிபர் கீழே கிடந்த
இரும்பு கம்பியை எடுத்து காட்டி, மீண்டும் பணம் கேட்டு, வழிப்பறியில்
ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். உடனே, அவர் சத்தம் போட்டதால்,
அந்த வாலிபர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். சேலம் டவுன் போலீசார்
நடத்திய விசாரணைக்கு பின், கொலை மிரட்டல் விடுத்த சேலம் முள்ளுவாடி
கேட், தியாகி வீரய்யா தெருவை சேர்ந்த பரணிதரன் மகன் ஆதிஅர்ஜூணன், 21,
என்பவரை கைது செய்தனர்.
