ADDED : டிச 16, 2024 03:52 AM
சங்ககிரி: சங்ககிரி அருகே வாலிபரை, மர்ம கும்பல் வெட்டி கொலை செய்-தது. இதற்கு முன்விரோதம் காரணமா என, போலீசார் விசாரிக்-கின்றனர்.
சேலம் மாவட்டம் சங்ககிரி மலை அடிவாரம், குஞ்சுமாரியம்மன் கோவில் அருகே வசித்தவர் மூர்த்தி, 39. கூலி வேலை செய்து வந்த இவர், நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு, பவானி பிரதான சாலையில் இருந்து சின்னாகவுண்டனுார் சாலையில் உள்ள இடுகாடு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது சிலர், அரிவாளால் மூர்த்தியை வெட்டியுள்ளனர். அவர், சம்பவ இடத்தில் உயிரிழந்தார். சங்ககிரி டி.எஸ்.பி., ராஜா, சம்பவ இடத்தை பார்வையிட்டார்.மூர்த்தியின் தாய் கமலம், சங்ககிரி போலீசில் புகார் அளித்தார். அதில், 'சங்ககிரி அருகே வேலம்மாவலசு, மூலப்பாறைக்காட்டை சேர்ந்தவர் கனகராஜ் உள்பட சிலர் சேர்ந்து, என் மகனை கொலை செய்து விட்டனர்' என கூறியிருந்தார். போலீசார், அப்பகுதியில் உள்ள, 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, வழக்குப்ப-திந்து விசாரிக்கின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது: மூர்த்தி, கனகராஜ் இடையே பணம் கொடுக்கல், வாங்கலில் முன்விரோதம் இருந்தது. இதனால் மூர்த்தி, அவரது நண்பரான, சங்ககிரி ஆர்.எஸ்., பகு-தியை சேர்ந்த அசோக்குமாரிடம், 'உன் குடும்பத்தை பற்றி கன-கராஜ் தவறுதலாக பேசி வருகிறார்' என கூறியுள்ளார்.
இதில் கோபமடைந்த அசோக்குமார், 'சின்னாகவுண்டனுார் சாலை ஐயப்பன் கோவில் அருகே உள்ள சஷ்டி நகருக்கு வா' என, கடந்த அக்., 13ல், கனகராஜை அழைத்துள்ளார். அதை நம்பி அவர், நண்பர் சரவணனை அழைத்துக்கொண்டு அப்பகு-திக்கு சென்றார்.
அப்போது அசோக்குமார், மூர்த்தி சேர்ந்து, கனகராஜை அரி-வாளால் வெட்ட முயன்றனர். சரவணன் தடுத்துள்ளார். அதில் அவரது வலது கை மோதிர விரல் துண்டாகியுள்ளது. இந்நி-லையில் மக்கள் வருவதை பார்த்து, அசோக்குமார், மூர்த்தி தப்-பினர்.
இதில் அசோக்குமாரை கைது செய்தோம். மூர்த்தி, நீதிமன்றத்தில் ஜாமின் பெற்றார். தற்போது அவர் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது தாய் கனகராஜ் மீது புகார் அளித்துள்ளதால் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.