sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

வைகை ஆற்றில் தடுப்பணை கட்டியதில் முறைகேடு: விசாரணைக்கு வலியுறுத்தும் விவசாயிகள்

/

வைகை ஆற்றில் தடுப்பணை கட்டியதில் முறைகேடு: விசாரணைக்கு வலியுறுத்தும் விவசாயிகள்

வைகை ஆற்றில் தடுப்பணை கட்டியதில் முறைகேடு: விசாரணைக்கு வலியுறுத்தும் விவசாயிகள்

வைகை ஆற்றில் தடுப்பணை கட்டியதில் முறைகேடு: விசாரணைக்கு வலியுறுத்தும் விவசாயிகள்


ADDED : ஜூலை 13, 2011 02:35 AM

Google News

ADDED : ஜூலை 13, 2011 02:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டியதில், முறைகேடு நடந்திருப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து தகுந்த ஆய்வு நடத்தி, தவறு செய்தவர்கள் மீது கலெக்டர் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கவேண்டும்.வைகை ஆற்றுப்படுகையில் உள்ள மணல் குவாரிகளால், நீர் ஆதாரங்கள் பாதிக்கப்படுகின்றன. அரசு அறிவித்த, அளவை விட ஆழமாக மணல் அள்ளுவதால், வைகை ஆற்றின் ஆழம் அதிகரித்துவிட்டன. இதனால் பாசன வசதி பெறும் கால்வாய்கள் மேடான பகுதியில் இருக்கின்றன. விவசாய பாசனத்திற்கு தண்ணீர் செல்லவில்லை. இதை சரிசெ#ய, ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுவதென, பொதுப்பணித்துறை முடிவு செய்தது. அதன்படி, தடுப்பணை கட்டும் பணி நடந்து வருகிறது.கடந்த ஆட்சியில், நீர், நிலவள திட்டத்தில் அன்னியனேந்தல் விலக்கு, வேதியரேந்தல் விலக்கு அருகே தடுப்பணை கட்டப்பட்டன.

கட்டிய சில மாதங்களிலேயே அவை சேதமடைந்துவிட்டன. இத்தடுப்பணைகள் கட்டியதில் முறைகேடு நடந்துள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஆதிமூலம் கூறுகையில்,''உலக வங்கி நிதியில், பல கோடி ரூபாய்செலவில் தடுப்பணைகள் கட்டப்பட்டது. கட்டிய ஆறு மாதத்திற்குள் அணைகள் தூர்ந்துவிட்டன. பொதுப்பணிதுறை அதிகாரிகள், தி.மு.க.,வினருடன் கைகோர்த்துக்கொண்டு, முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us