/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நகைக் கடை ஊழியர்கள் விபரம் சேகரித்து வைக்க எஸ்.பி., உத்தரவு
/
நகைக் கடை ஊழியர்கள் விபரம் சேகரித்து வைக்க எஸ்.பி., உத்தரவு
நகைக் கடை ஊழியர்கள் விபரம் சேகரித்து வைக்க எஸ்.பி., உத்தரவு
நகைக் கடை ஊழியர்கள் விபரம் சேகரித்து வைக்க எஸ்.பி., உத்தரவு
ADDED : ஆக 13, 2011 04:39 AM
சிவகங்கை : கடைகளில் வேலைபார்க்கும் ஊழியர்கள் விபரங்களை சேகரித்து வைக்குமாறு, நகை கடை உரிமையாளர்களுக்கு பன்னீர்செல்வம் எஸ்.பி., ஆலோசனை வழங்கியுள்ளார்.
சிவகங்கை எஸ்.பி., அலுவலகத்தில் நகை கடை உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.
பன்னீர் செல்வம் எஸ்.பி., கூறுகையில்,'' நகை கடைகளில் தகுதியான பாதுகாவலர்களை நியமிக்க வேண்டும். கடையில் எச்சரிக்கை மணி பொருத்த வேண்டும். கடை உள்ளே, வெளியே சுழல் கேமரா, விளக்கு வெளிச்சம் இருக்க வேண்டும்.
கடையில் வேலைபார்ப்பவர்களின் பெயர், முகவரி, போட்டோ, கைரேகைகளை சேகரித்து வைப்பது அவசியம்.
ஊழியர்கள் நடத்தை குறித்து நன்கு அறிந்திருக்கவேண்டும். உரிமையாளர் கடையை பூட்டிவிட்டு செல்லும் போது, நகைகளை பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கவேண்டும். நகைகளை அறுந்த நிலையில் விற்க முயற்சித்து வருபவர்கள் மீது சந்தேகம் இருந்தால், உடனே அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் தெரிவிக்க வேண்டும். முன்பின் தெரியாதவர்களிடம் நகை வாங்க கூடாது,'' என்றார்.