தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ஆதிதிராவிட இளைஞர்களுக்கு தாட்கோ புதிய கடன் திட்டம்

ஆதிதிராவிட இளைஞர்களுக்கு தாட்கோ புதிய கடன் திட்டம்

ஆதிதிராவிட இளைஞர்களுக்கு தாட்கோ புதிய கடன் திட்டம்


ADDED : நவ 26, 2011 12:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 26, 2011 12:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை:இந்து ஆதிதிராவிட தொழில் முனைவோர் பயனடைய தமிழக அரசு புதிய கடன் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் நிலம் வாங்குதல், மற்றும் நிலத்தை மேம்பாடு செய்தல், புதிய தொழில் முனைவோர் திட்டம், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திட்டம், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான சுழல் நிதி திட்டம், மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கான பொருளாதார கடன் வழங்கப்படுகிறது.



பயனாளிகளின் விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட பகுதி வங்கிக்கு பரிந்துரை செய்யப்படும். வங்கிகள் கடன் தர ஒப்புதல் வழங்கியவுடன் கடன் தொகையில் 30 சதவீதமோ அல்லது 2.25 லட்ச ரூபாய், இதில் எது குறைவோ, அத்தொகை மான்யமாக வழங்கப்படும்.சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த இந்து ஆதி திராவிட பயனாளிகளுக்கு ஒரு கோடியே 19 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய் மான்யம் வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பயன்பெற விரும்பும் பயனாளிகள் மாவட்ட தாட்கோ மேலாளர் அல்லது சம்மபந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் விண்ணப்பத்தினை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.விண்ணப்பங்களை www.tahdco.govt.co.in என்ற இணையதளத்திலும் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.விண்ணப்பங்களை டிசம்பர் 30 ம் தேதிக்குள் தாட்கோ மாவட்ட மேலாளரிடம் வழங்கலாம்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us