/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மணல் விலையை கட்டுப்படுத்த பா.ஜ., கோரிக்கை
/
மணல் விலையை கட்டுப்படுத்த பா.ஜ., கோரிக்கை
ADDED : ஜூலை 14, 2011 11:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை : தேவகோட்டையில் பா.ஜ., மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். பொது செயலாளர்கள் நாகராஜன், ரவிராஜன் முன்னிலை வகித்தனர். இணை அமைப்பாளர் ராஜாராம் வரவேற்றார். மாநில துணை தலைவர் எச்.ராஜா பேசினார். தேவகோட்டை நகர் அமைப்பாளர் செல்வராஜ், மாநில பொது செயலாளர் சரவணபெருமாள் பங்கேற்றனர்.தீர்மானம்: நடுத்தர வர்க்கத்தினர் பயன்பெறும் வகையில், மணல் குவாரிகளில் இடைதரகரின்றி மணல் விலையை நிர்ணயிக்க வேண்டும். விவசாயிகள் பயன்பெறும் வகையில் விதை பண்ணையில் விதைகள் வழங்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

