/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தொண்டி ரோட்டில் ஆக்கிரமிப்பு தொடர்கிறது
/
தொண்டி ரோட்டில் ஆக்கிரமிப்பு தொடர்கிறது
ADDED : ஆக 29, 2011 11:07 PM
சிவகங்கை:சிவகங்கை - தொண்டி ரோட்டில் இரு புறமும் கடைகள் ஆக்கிரமித்துள்ளதால், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது.
மதுரை - தொண்டி இடையே ரோட்டின் இருபுறமும் ரோடு ஸ்திரப்படுத்தும் பணி, முதற்கட்டமாக சிவகங்கையில் நடக்கிறது. இதற்காக ரோட்டின் இருபுறமும் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. இருப்பினும் சிவகங்கையில் ரோட்டின் இருபுறமும் தள்ளுவண்டிகாரர்கள் ஆக்கிரமித்துள் ளனர்.இது குறித்து சிவகங்கை கார்மேகம் கூறுகையில்,''ரோடு அகலப்படுத்தும் பணிக்கென ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. அரசியல் தலையீடு காரணமாக இவை முழுமை பெற வில்லை. ஆக்கிரமிப்புகளை அகற்றினால் தான், ரோடு விரிவாக்க பணிகள் திருப்திகரமாக இருக்கும்,'' என்றார். ஆக்கிரமிப்பை அகற்ற நெடுஞ்சாலைத்துறையினர் உத்தரவிடவேண்டும்.