தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/மண் கூஜாக்கள் விற்பனை மும்முரம்

மண் கூஜாக்கள் விற்பனை மும்முரம்

மண் கூஜாக்கள் விற்பனை மும்முரம்


ADDED : பிப் 20, 2024 11:48 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 20, 2024 11:48 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் 300க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் வருடம் தோறும் சீசனுக்கு தகுந்தாற்போல் மண்பாண்ட பொருட்களை தயார் செய்து வருகின்றனர்.

தற்போது பகலில் அதிக வெயில் தாக்கம் காரணமாக மக்கள் குளிர் பானங்களை பருக துவங்கியுள்ளனர். மேலும் இயற்கை முறையில் உடலுக்கு தீங்கு விளைவிக்காத குளிர்ந்த தண்ணீரை பருக மக்கள் மானாமதுரை பகுதியில் தயாராகும் மண் கூஜாக்களை வாங்கி செல்கின்றனர்.

திண்டுக்கல் மாவட்ட மொத்த வியாபாரி குமார்48, கூறுகையில், ஏப், மே, மாதங்களில் வெயில் காலங்களில் மண் கூஜாக்கள் வாங்க இங்கு வந்தால் கூஜாக்களுக்கு தட்டுப்பாடு இருக்கும். தற்போதே வெயில் அதிகமாக இருப்பதால் இங்கு கூஜாக்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

ரூ. 50 லிருந்து ரூ.200 வரைக்கும் பல்வேறு அளவுகளில் மண் கூஜாக்கள் விற்பனைக்கு உள்ளன. மாவட்டத்தில் பல்வேறு ஊர்களைச் சேர்ந்த மக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்வதாக கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us