ADDED : செப் 27, 2011 12:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி:நூலகத்துறையை மேம்படுத்துவதற்கான கலந்தாய்வு கூட்டம் காரைக்குடியில் நடந்தது.
நூலகர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற நூலகர்கள் பாலசுப்பிரமணியன், பொன்முடி முன்னிலை வகித்தனர்.நூலகர்கள் சந்திரசேகர் (கரூர்), மதி (திருச்சி), அய்யலு( ராம்நாடு), குமார்(நெல்லை), ராதாகிருஷ்ணன் (நாகை) உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். நூலகர் எஸ்.செல்வம் ஏற்பாட்டை செய்திருந்தார்.