/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரேஷன் அரிசியை "பளீச்' எனஅரைத்து தர ஆலைகளுக்கு உத்தரவு
/
ரேஷன் அரிசியை "பளீச்' எனஅரைத்து தர ஆலைகளுக்கு உத்தரவு
ரேஷன் அரிசியை "பளீச்' எனஅரைத்து தர ஆலைகளுக்கு உத்தரவு
ரேஷன் அரிசியை "பளீச்' எனஅரைத்து தர ஆலைகளுக்கு உத்தரவு
ADDED : செப் 27, 2011 12:04 AM
சிவகங்கை:''ரேஷனில் வினியோகம் செய்யும் அரிசியை பளிச் என அரைத்து தராவிட்டால், கூலி தரப்படமாட்டாது,'' என, அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு, அரசு உத்தரவிட்டுள்ளது.
குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷனில் இலவசமாக அரிசி வழங்கப்படும் என அரசு அறிவித்தது.
இதற்காக, சுத்தமான அரிசியை வழங்கும் நோக்கில், ரேஷன் கடைகளில் கார்டுகளுக்கு வழங்கும் அரிசியில் கருப்பு அரிசி, பழுப்பு நிற அரிசி கலந்து இருந்தால், அவற்றை உடனே நுகர்பொருள் வாணிப கழக குடோன்களுக்கு திருப்பி அனுப்ப உத்தரவிட்டுள்ளது.இருப்பின், கடந்த மாதம் வினியோகம் செய்த அரிசி மூடைகளில், கருப்பு, பழுப்பு நிற அரிசி கலந்திருந்தன.
உத்தரவு:இதை தவிர்த்து அனைத்து ரேஷன் கடைகளிலும், தரமான அரிசி பளிச் என இருக்கும் நோக்கில், கொள்முதல் செய்யப்படும் நெல்லை, சுத்தமாக அரவை செய்து, பளிச்சென ஆலைகள் வழங்கவேண்டும். அப்படி வழங்கினால் தான் அரவைக்கான கூலி தரப்படும் என கண்டிப்பான உத்தரவிட்டுள்ளது.
வழங்கல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:அரசு கார்டுகளுக்கு வழங்கும் அரிசி பளிச்சென இருக்கும் நோக்கில், நெல்லை ஒரு முறை ஊறவைத்து அவியல் செய்தால் போதும் என கூறிவிட்டது என்றார்.