ADDED : செப் 04, 2024 12:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை அருகே கொல்லங்குடியில் கடந்த ஜூன் 30ஆம் தேதி அண்ணன் தம்பியை கொலை செய்த வழக்கில் 4 பேரை குண்டர் தடுப்பு காவலில் அடைக்க கலெக்டர் ஆஷா அஜித் உத்தரவிட்டார்.
சிவகங்கை அருகே கொல்லங்குடியில் ஜூன் 30 இரவு 9:00 மணிக்கு ஜெயசூர்யா, சுபாஷ் என்ற அண்ணன் தம்பியை ஒரு கும்பல் வெட்டி கொலை செய்தது. இந்த கொலையில் தொடர்புடைய புதுப்பட்டியை சேர்ந்த சக்தி மகன் சுள்ளான் மதன் 21, சவரிநாதன் மகன் முத்துபாண்டி 21, கொட்டகுடி கார்த்திகைராஜா மகன் மணிகண்டபிரபு 22, சிவகங்கை முத்துகருப்பன் மகன் செல்வகுமார் 28 ஆகியோரை குண்டர் தடுப்பு காவலில் அடைக்க எஸ்.பி., டோங்கரே பிரவீன் உமேஷ் பரிந்துரையின் பேரில் கலெக்டர் ஆஷா அஜித் உத்தரவிட்டார்.