/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மாற்றுப்பாதை இல்லாமல் பாலம் கட்டுமான பணி
/
மாற்றுப்பாதை இல்லாமல் பாலம் கட்டுமான பணி
ADDED : மே 09, 2024 05:31 AM

சாலைக்கிராமம்: சாலைக்கிராமத்தில்இருந்து கிளாஞ்சுனை செல்லும் ரோட்டில் பாலங்கள் புதிதாக அமைக்கும் பணி நடக்கிறது. மாற்று பாதை அமைக்காததால் கிராம மக்கள் அவதிக்குஉள்ளாகின்றனர்.
இளையான்குடி அருகே சாலைக்கிராமத்திலிருந்து கிளாஞ்சுனை செல்லும் 9 கி.மீ நீளமுள்ள ரோட்டில் உள்ள 2 பழைய பாலங்களை இடித்துவிட்டு புதிதாக பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
பாலம் கட்டும் இடங்களுக்கு அருகில் வாகனங்கள் செல்லும் வகையில் மாற்றுப்பாதை அமைக்காமல் பணி நடைபெற்று வருவதால் அப்பகுதியில் உள்ள வடக்கு சாலைக்கிராமம், அய்யம்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அந்த வழியாக செல்ல முடியவில்லை.
நீண்ட துாரம் சுற்றி செல்ல வேண்டியுள்ளதால் காலதாமதமும், எரிபொருள் செலவும் கூடுதல் செலவாகுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
மாவட்ட நிர்வாகம் பாலங்கள் அமைக்கும் இடத்திற்கு அருகில் மாற்றுபாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.