நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி:' பள்ளத்துார் அருகே உள்ள கொத்தரி கிராமத்தில் தாசில்தார் மைலாவதி மற்றும் சிவகங்கை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அவ்வழியாக வந்த ஆட்டோவை சோதனை செய்தபோது 10 மூடைகளில் 420 கிலோ ரேஷன் புழுங்கல் அரிசி கடத்தி வந்தது தெரிய வந்தது.
ரேஷன் அரிசியை கைப்பற்றி காரைக்குடி நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனர். கடத்தலில் ஈடுபட்ட காரைக்குடி கழனிவாசல் காளைராஜன் மனைவி ரேவதி என்பவர் மீது சிவகங்கை குடிமை பொருள் வழங்கல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.